search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி விலை"

    விளைச்சல் மற்றும் வரத்து குறைந்ததின் எதிரொலியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது. அதேநேரம் பழங்களின் விலை குறைந்திருக்கிறது. #Koyambedumarket
    சென்னை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான பூஜை பொருட்கள் மற்றும் காய்கறி-பழங்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டத்துடனேயே காணப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருநாளே இருப்பதால் காய்கறி-பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக மஞ்சள் குலை, இஞ்சி கொத்து, கரும்பு உள்ளிட்டவைகளும் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆனாலும் விளைச்சல்-வரத்து குறைந்ததின் விளைவாக காய்கறி விலை அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்து கோயம்பேடு காய்-கனி-மலர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் பொருளாளர் பி.சுகுமார் கூறியதாவது:-

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 200 முதல் 250 லாரிகள் வரை காய்கறி கொண்டுவரப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்துடன் ஆண்டின் கடைசி அறுவடை முடிந்தது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலையில் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது.

    குறிப்பாக கடந்த வாரம் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ், தற்போது ரூ.40 வரை விற்பனை ஆகிறது. அதேபோல ரூ.20 வரை விற்பனை ஆன அவரை தற்போது ரூ.30 ஆக உயர்ந்திருக்கிறது. தக்காளி கடந்த வாரம் ரூ.20-க்கு விற்பனை ஆனது. தற்போது தக்காளி ரூ.45-க்கு விற்பனை ஆகிறது. அதேவேளை கேரட் விலை 50 சதவீதம் குறைந்திருக்கிறது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:

    பல்லாரி - ரூ.15 முதல் ரூ.20 வரை, உருளைக்கிழங்கு - ரூ.15 முதல் ரூ.20 வரை, கேரட் - ரூ.15 முதல் ரூ.20 வரை, பீன்ஸ் - ரூ.30 முதல் ரூ.40 வரை, நூக்கல் - ரூ.15 முதல் ரூ.25 வரை, சவ்சவ் - ரூ.15 முதல் ரூ.20 வரை, பீட்ரூட் - ரூ.15 முதல் ரூ.18 வரை, முட்டைக்கோஸ் - ரூ.12 முதல் ரூ.15 வரை, மிளகாய் - ரூ.20 முதல் ரூ.30 வரை, கொடைமிளகாய் - ரூ.25 முதல் ரூ.35 வரை, இஞ்சி - ரூ.60 முதல் ரூ.80 வரை, சேனைக்கிழங்கு - ரூ.13 முதல் ரூ.15 வரை, சேப்பங்கிழங்கு - ரூ.20 முதல் ரூ.25 வரை, கத்திரிக்காய் - ரூ.20 முதல் ரூ.25 வரை, வெண்டைக்காய் - ரூ.40 முதல் ரூ.50 வரை, அவரைக்காய் - ரூ.25 முதல் ரூ.30 வரை, கோவைக்காய் - ரூ.15 முதல் ரூ.20 வரை, கொத்தவரங்காய் - ரூ.20 முதல் ரூ.30 வரை, பாகற்காய்(பன்னீர்) - ரூ.30, பெரிய பாகற்காய் - ரூ.25, முருங்கைக்காய் - ரூ.50 முதல் ரூ.60 வரை, முள்ளங்கி - ரூ.15 முதல் ரூ.20 வரை, வெள்ளரிக்காய் - ரூ.15, புடலங்காய் - ரூ.20 வரை, தக்காளி - ரூ.40 முதல் ரூ.45 வரை, காலிபிளவர்(ஒன்று) - ரூ.15 முதல் ரூ.20 வரை, பீர்க்கங்காய் - ரூ.25 முதல் ரூ.30 வரை, சுரைக்காய் - ரூ.10 முதல் ரூ.15 வரை, சாம்பார் வெங்காயம் - ரூ.50 முதல் ரூ.60 வரை, தேங்காய் - ரூ.25 முதல் ரூ.30 வரை, வாழைக்காய் - ரூ.7 முதல் ரூ.10 வரை (ஒன்றுக்கு).

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தாலும், பழங்களின் விலை குறைந்திருக்கிறது. பழங்களின் விலை நிலவரம் குறித்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-

    பொங்கலையொட்டி பழங்களின் வரத்தும் கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. வரத்து அதிகரித்ததால் பழங்களின் விலை ரூ.20 முதல் ரூ.25 வரை குறைந்திருக்கிறது. குறிப்பாக காஷ்மீர் ஆப்பிள் மற்றும் மாதுளையின் விலை வெகுவாகவே குறைந்திருக்கிறது. கடந்த வாரத்தை காட்டிலும் காஷ்மீர் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சின் விலை தலா ரூ.30-ம், மாதுளை விலை ரூ.40-ம் குறைந்திருக்கிறது.

    பழங்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்)

    வாஷிங்டன் ஆப்பிள்- ரூ.150 முதல் ரூ.160 வரை, ஷிம்லா ஆப்பிள்- ரூ.100 முதல் ரூ.120 வரை, காஷ்மீர் ஆப்பிள் (டெலிசியஸ்)- ரூ.80 முதல் ரூ.100 வரை, மாதுளை- ரூ.80 முதல் ரூ.100 வரை, சாத்துக்குடி- ரூ.40 முதல் ரூ.50 வரை, ஆரஞ்சு (கமலா)- ரூ.35 முதல் ரூ.45 வரை, கருப்பு திராட்சை- ரூ.60, பன்னீர் திராட்சை- ரூ.70, திராட்சை (சீட்லெஸ்)- ரூ.100, சப்போட்டா- ரூ.40, கொய்யா- ரூ.40, இலந்தைபழம்- ரூ.15, தர்பீஸ்- ரூ.15, அன்னாசிபழம்- ரூ.40 முதல் ரூ.50 வரை, வாழை- ரூ.250 முதல் ரூ.500 வரை.

    இவ்வாறு அவர் கூறினார். #Koyambedumarket

    பண்டிகையொட்டி காய்கறி விலை உயராததால் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    வேலூர்:

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, பெங்களூர்,ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்தும் கிராம புறங்களில் இருந்தும் காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பண்டிகையொட்டி விலை உயராததால் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    இதனால் மண்டித்தெரு லாங்குபஜாரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று மாலை முதல் மார்க்கெட் பகுதி போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பிக்கிறது.

    வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் மார்க்கெட்க்கு வருபவர்கள் படாதபாடுபடுகின்றனர்.

    மண்டித்தெரு, லாங்குபஜாரில் போலீசார் நிறுத்தும் வாகனங்களை ஓழுங்கு படுத்த வேண்டும். என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விலை(கிலோ ரூபாயில்) வருமாறு: தக்காளி-12, கத்திரிக்காய்-30, பீன்ஸ்-40, கேரட்-30, அவரக்காய்-30, முருங்கை-15, முள்ளங்கி-18, வெண்டைக்காய்-15, சின்னவெங்காயம்-40, பெரிய வெங்காயம்-20, வாழைக்காய் ஒன்று ரூ-3, உருளைக்கிழங்கு-20, கருணைக்கிழங்கு-30 க்கும் விற்பனையானது.

    விநாகர் சதுர்த்தியொட்டி மல்லிகை பூ தவிர மற்ற பூக்கள் வரத்து அதிகமாக உள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ 600க்கு விற்பனையானது. ஜாதிமல்லி ரூ140, ரோஜா ரூ130, சாமந்தி ரூ120, கேந்தி ரூ20க்கும் விற்பனையானது.

    பக்ரீத் மற்றும் முகூர்த்தநாள் எதிரொலியாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை நீண்ட நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு கேரளாவிற்கும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

    கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக குறைந்த அளவு காய்கறிகளே அனுப்பி வைக்கப்பட்டன. தினசரி 80 லாரிகளில் கேரளாவிற்கு காய்கறிகள் செல்லும். ஆனால் கடந்த ஒரு வாரமாக 25 லாரிகளில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக காய்கறிகளின் ஆர்டர்களும் குறைந்தது. இதனால் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் கிடைத்த விலைக்கு காய்கறிகளை விற்று சென்றனர்.

    தற்போது கேரளாவில் மழை முற்றிலும் நின்றுவிட்டதால் நேற்று முதல் வழக்கம்போல் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் நாளை பக்ரீத் பண்டிகை வருவதாலும் அடுத்து 2 நாட்கள் முகூர்த்த நாளாக இருப்பதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.

    எனவே கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடந்த காய்கறிகளுக்கும் கூடுதல் விலை கிடைத்துள்ளது.

    கிலோ ரூ.17-க்கு விற்ற வெண்டை ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் ரூ.45, பல்லாரி ரூ.30, தேங்காய் ரூ.45, இஞ்சி ரூ.120, பூண்டு ரூ.120, கத்தரிக்காய் ஒரு பை ரூ.450, தக்காளி ஒரு பெட்டி ரூ.150, புதினா ரூ.50, மல்லி ரூ.30, எலுமிச்சை ரூ.30, பீட்ரூட் ரூ.15, பீன்ஸ் ரூ.40, முருங்கைக்காய் ரூ.18, பச்சை மிளகாய் ரூ.50 என கொள்முதல் செய்யப்பட்டது.

    பெரும்பாலான காய்கறிகளின் விலை 2 மடங்கு அதிகரித்தது. இதனால் விவசாயிகளிடமும் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு நிலமை சீரடைந்துள்ளதால் கேரளாவிற்கும் அதிக அளவு காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கடந்த 12 நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் டீசல் விலை 3 ரூபாய் 20 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #petroldiesel
    சேலம்:

    இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.

    இதனால் படிப்படியாக டீசல் விலை உயர்ந்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் 72.70 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 12 நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் டீசல் விலை 3 ரூபாய் 20 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இதில் முடிவு ஏற்படாவிட்டால் லாரி வாடகை மேலும் உயர்த்தப்பட்டு காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது- டீசல் விலை உயர்வால் லாரி தொழில் நாளுக்கு நாள் நசுங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வாடகை உயர்த்தி நிர்ணயிக்கப்படவில்லை. தினமும் டீசல் விலை உயர்வால் சரியாக வாடகை நிர்ணயம் செய்ய முடியவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் தினமும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

    லாரிகள் அதிகமாக உள்ள நிலையில் லோடு கிடைக்காததால் ஓட்டம் இல்லாமல் ஏராளமான லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம் லாரிகள் பழைய இரும்பு விலைக்கு விற்கப்படுகிறது.



    டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் பிரிமியம் 21 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. டோல்கேட் கட்டணம் அதிகரிக்கப்பட்டதுடன் நீண்ட நேரம் காத்து நின்று செலுத்த வேண்டி உள்ளது.

    இதனை தவிர்க்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கசாவடி கட்டணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20-ந் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் தொடங்குகிறது.

    இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் கீழ் உள்ள நான்கரை லட்சம் லாரிகளும் பங்கேற்கும். இதனால் சரக்கு போக்குவரத்து முடங்கும் நிலை உள்ளது. இதில் லாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #petroldiesel

    ×